உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் செரிமான அமைப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி குடலை ஆதரிக்க இயற்கையான, பயனுள்ள வழியாக மூலிகை உதவுகிறது
பெருஞ்சீரகம்
இது வாயு மற்றும் வீக்கத்திற்கு ஒரு இயற்கை தீர்வாகும். எனவே உணவுக்குப் பிறகு ஒரு சில பெருஞ்சீரகம் விதைகளை மென்று சாப்பிடலாம் அல்லது பெருஞ்சீரக டீ குடிக்கலாம்
கெமோமில்
செரிமான கோளாறுகளுக்கு கெமோமில் டீ சிறந்த தேர்வாகும். இது தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் அஜீரணத்தை குறைக்கவும் உதவுகிறது
இஞ்சி
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குமட்டலைப் போக்கவும் இஞ்சி சிறந்த தேர்வாக அமைகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி குடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது
மஞ்சள்
அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள், குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதற்கு உணவில் மஞ்சள் சேர்க்கலாம் அல்லது சூடாக மஞ்சள் தொடர்பான ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம்
புதினா
புதினா இலைகள் உட்கொள்வது செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளை தளர்த்தவும், வாயு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு புதிய புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது புதினா தேநீர் குடிக்கலாம்
அதிமதுரம்
இது வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கவும், செரிமான அமைப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் அஜீரணக் கோளாறுகளைத் தீர்க்கவும் உதவுகிறது