உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்த்தொற்றுக்களால் எளிதில் பாதிக்கப்படலாம். இதில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத பானங்கள் சிலவற்றைக் காணலாம்
வானிலை மாற்றங்கள்
வானிலை மாற்றங்கள் நடக்கும் இந்த சூழ்நிலையில் நோய்த்தொற்றுக்கள் மிக விரைவாக பரவலாம். குறிப்பாக, இருமல், சளி போன்றவற்றால் எளிதில் பாதிக்கப்படலாம்
துளசி மிளகு கஷாயம்
துளசி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கஷாயம் தயார் செய்து அருந்துவது நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க உதவுகிறது. இதில் பல்வேறு ஆரோக்கிய பண்புகள் நிறைந்த தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்
கிரீன் டீ
கிரீன் டீ-யில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது பருவகால காய்ச்சலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்துவது நோய்த்தொற்றுக்களைத் தடுக்கிறது
இஞ்சி, மஞ்சள் டீ
தண்ணீரில் ஒரு துண்டு பச்சை மஞ்சள் மற்றும் இஞ்சியைச் சேர்த்து, அதன் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை வடிகட்டி தேன், கருப்பு உப்பு சேர்த்து குடிக்கலாம்
திரிபலா கஷாயம்
வெதுவெதுப்பான நீரில் திரிபலா பொடியைச் சேர்த்து குடிப்பது உடலிலிருந்து நச்சுக்களை நீக்கவும், பருவகால காய்ச்சலிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது
இலவங்கப்பட்டை டீ
இலவங்கப்பட்டையில் பாலிபினால்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது
கிலோய் டீ
கிலோயின் பட்டையை லேசாக நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதில் சுவைக்காக இஞ்சி சேர்த்து வெதுவெதுப்பாகக் குடிக்கலாம்