தேனுடன் மறந்தும் இந்த பொருள்களைச் சேர்க்காதீங்க

By Gowthami Subramani
11 Oct 2024, 14:49 IST

தேன் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால், தேனுடன் சில பொருள்களைச் சேர்ப்பது அதன் செயல்திறனைக் குறைக்கலாம் அல்லது தீங்கு விளைவிக்கலாம். இதில் தேனுடன் சேர்க்கக் கூடாத உணவுகளைக் காணலாம்

சூடான நீர் அல்லது தேநீர்

கொதிக்கும் நீர், பால் அல்லது சூடான தேநீருடன் தேன் சேர்த்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெப்பமானது தேனில் உள்ள இயற்கையான நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அழிக்கலாம். சூடான நீருக்கு மாற்றாக, வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயுடன் தேன் சேர்த்து உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் வெள்ளரிக்காய் உடலை குளிர்விக்கிறது. தேன் அதை சூடேற்றுகிறது. இது சமநிலையின்மைக்கு வழிவகுக்கலாம்

பூண்டு

பூண்டு மற்றும் தேன் கலந்த உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். பூண்டில் உள்ள வலுவான பண்புகள் தேனை வென்று, அதன் நன்மைகளைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது

முள்ளங்கி

ஆயுர்வேதத்தில் முள்ளங்கியைத் தேனுடன் கலப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அது உடலில் மென்மையாக்கும். இது காப்போக்கில் செரிமான பாதிப்பு, அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்களுடன் தேன் சேர்ப்பதால் அதன் சுவையைப் பாதிக்கிறது. மேலும் இது அதன் ஆரோக்கிய நன்மைகளைக் குறைக்கிறது. எனவே குறைந்த அமிலத்தன்மை உணவுகளுடன் தேன் சேர்ப்பது நல்லது