மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹெர்பல் சப்ளிமெண்ட்ஸ்

By Gowthami Subramani
04 Dec 2024, 17:46 IST

இன்று பலரும் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை சந்திக்கின்றனர். எனினும், பதட்டத்தைக் கையாள்வதற்கு சில மூலிகை சப்ளிமெண்ட்ஸ்களைப் பயன்படுத்தலாம். இவை பதட்டத்தின் அறிகுறிகளை எளிதாக்க இயற்கையான வழியைத் தருகிறது

பதட்டத்தை எதிர்த்துப் போராடவும், மனதை அமைதிப்படுத்தவும் சில சிறந்த மூலிகை சப்ளிமெண்ட்ஸ்களைப் பயன்படுத்தலாம்

கெமோமில்

இது அதன் அமைதியான பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை மூளை ஏற்பிகளுடன் பிணைக்கப்பட்டு, பதட்டத்தைக் குறைக்கிறது. மேலும் இவை மனநிலையை மேம்படுத்துகிறது

எலுமிச்சை தைலம்

இது பதட்டம் மற்றும் மன அழுத்தத்திற்கு உதவும் லேசான மயக்க பண்புகளைக் கொண்டுள்ளது. எலுமிச்சை தைலத்தைப் பயன்படுத்துவது மனதை அமைதிப்படுத்தி, மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது

லாவண்டர்

லாவண்டர் ஆனது அதன் இனிமையான வாசனைக்கு பிரபலமானதாகும். ஆனால், இதை வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் போது கவலை நிவாரணியாகவும் செயல்படுகிறது

அஸ்வகந்தா

அஸ்வகந்தா அதன் அடாப்டோஜெனிக் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இவை கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது

குறிப்பு

இந்த மூலிகை சப்ளிமெண்ட்ஸின் உதவியுடன் தினசரி கவலையை நிர்வகிக்கலாம். எனினும், பதட்டத்தின் அறிகுறிகள் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து இருந்தால் சுகாதார வழங்குநரை அணுகுவது நல்லது