எலும்புகளில் தாங்க முடியாத வலியைக் குறைக்க கடுகு எண்ணெய் மிகவும் உதவுகிறது. மூட்டு வலியைக் குறைக்க, கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து, வெந்நீர் பை மூலம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த மசாஜ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் உடல்வலி படிப்படியாக மறையும்.
கற்பூரவல்லியில் மூட்டுவலி எதிர்ப்பு மற்றும் ஆன்ட்டி ஃப்ளோஜிஸ்டிக் பண்புகள் உள்ளன, அவை வலியைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
நல்லெண்ணெய்
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த, நல்லெண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்தால் மூட்டு வலி குறைவது மட்டுமின்றி தசைகள் வலுப்பெறும்.
ஆளி விதை எண்ணெய்
பிளக்ஸ் சீட் ஆயில்மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கக்கூடியது. உங்கள் மூட்டுகளில் கடுமையான வலி இருந்தால், இந்த எண்ணெயைத் தவறாமல் பயன்படுத்தத் தொடங்குங்கள்.