படுக்கைக்குச் செல்லும் முன் இதில் 2 இலைகளை மென்று சாப்பிட்டு பாருங்க!

By Kanimozhi Pannerselvam
08 Oct 2024, 00:00 IST

வெற்றிலைச் சாறு மலச்சிக்கலைப் போக்குகிறது. வயிற்றுப் புண் மற்ற வயிற்றுப் பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

உடலில் சிறிய வெட்டுக்காயம் இருந்தால் வெற்றிலை சாற்றை அங்கே தடவலாம். இது ஒரு சிறந்த வலி நிவாரணி. வெற்றிலையில் டானின்கள், புரொபேன்கள், ஆல்கலாய்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

வெற்றிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளால், வெற்றிலைச் சாறு பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது. பல்வலி மற்றும் ஈறு வீக்கத்திற்கு வெற்றிலை சாற்றை வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.

வெற்றிலை சாறு சளி மற்றும் காய்ச்சலுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். வெற்றிலை சாறு நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.

வெற்றிலை சாறு வாந்தி பிரச்சனையை போக்குகிறது எனவே, பலருக்கு சாப்பாட்டிற்கு பின் வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கம் உள்ளது.

வெற்றிலை சாறு லிபிடோவை அதிகரிக்கிறது. இது பாலுணர்வை தூண்டுகிறது. வெற்றிலை சாப்பிட்டால் உடலுறவு ஆசை இரட்டிப்பாகிறது. இந்த வைத்தியம் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.