தூக்கமின்மை பிரச்சனையைப் போக்க உதவும் மூலிகைகள்

By Gowthami Subramani
27 Feb 2024, 15:55 IST

இரவு தூங்குவதில் இன்று பலரும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். இரவில் தூங்கும் போது ஆயுர்வேத மூலிகைகளைச் சேர்த்து குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனையை போக்கலாம்

கெமோமில் டீ

கெமோமில் டீ தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. தூங்கும் முன் இதைக் குடிப்பது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது

லாவண்டர் டீ

லாவண்டரின் வாசனை நுகர்வு மன அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கமின்மை பிரச்சனையை நீக்கி ஓய்வை வழங்குகிறது. இதன் சுவை மற்றும் வாசனை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது

வலேரியன் வேர்

வலேரியன் வேரை எடுத்துக் கொள்வது தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை நீக்க உதவுகிறது

எலுமிச்சை தைலம்

இவை நரம்பு மண்டலத்தை தளர்த்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இரவு நேரத்தில் ஒரு கப் எலுமிச்சை தைலம் டீ குடிப்பது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது