கொழுப்பு கல்லீரலை இயல்பாக்க சில மூலிகைகள் அல்லது மசாலாப் பொருட்கள் உதவுகின்றன. இவை ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகை பொருள்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்பு கல்லீரலை இயல்பாக்க உதவுகிறது
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் ஆனது சிறந்த கல்லீரல் நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது அதன் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
இஞ்சி
இது உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்க வழிவகுக்கிறது
பூண்டு
இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதன் மூலம் கொழுப்பு கல்லீரலை இயல்பாக்கலாம்
இலவங்கப்பட்டை
இந்த மசாலா இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து கல்லீரலில் கொழுப்பு படிவுகளைக் குறைக்கிறது. இவ்வாறு கொழுப்பு கல்லீரலை விரைவில் குறைக்கிறது
கிரீன் டீ
இதில் கேட்டசின்கள் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால், அவை கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் குறைக்கிறது
ஜின்ஸெங்
இது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, கல்லீரலை நச்சு நீக்க உதவுகிறது. மேலும் கொழுப்பு திரட்சியைக் குறைத்து கல்லீரல் நொதிகளின் அளவை அதிகரிக்கிறது