வெயிட் லாஸ் முதல் ஸ்கின் கேர் வரை... மா இலை இவ்வளவு நல்லதா?
By Kanimozhi Pannerselvam
24 Nov 2024, 01:42 IST
வெயிட் லாஸ்
மா இலையுடன் தண்ணீரை கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? கொழுப்பை எரிப்பதைத் தடுக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் இது நன்மை பயக்கும்.
அசிட்டி
மாவிலையை நன்கு காயவைத்து அரைக்கவும். இந்தப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, உணவுக்குப் பிறகு குடித்து வந்தால், அசிடிட்டி போன்ற செரிமானப் பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
வெதுவெதுப்பான நீரில் மாவிலை பொடியுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை.
ஆஸ்துமா
மாவிலையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைப்பதும் சுவாச ஆரோக்கியத்திற்கு நல்லது. மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமாவைப் போக்க யூகலிப்டஸ் எண்ணெயை ஓரிரு துளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
முகப்பரு
முகப்பரு தழும்புகள் மற்றும் தோல் அழற்சியைப் போக்க மாவிலையை அரைத்து நேரடியாக அந்தப் பகுதிகளில் தடவலாம். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
ரத்த அழுத்தம்
மாவிலை தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆறிய பிறகு தினமும் இரண்டு வேளை குடிக்கவும். இது இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சிறிது தேன் சேர்க்கவும்.