வாரத்திற்கு 2 நாள் ராகி கூழ் குடித்தால் இவ்வளவு நல்லதா?
By Kanimozhi Pannerselvam
15 Feb 2024, 10:35 IST
தசைகளுக்கு நல்லது
ராகியில் புரோட்டீன் அதிகம் உள்ளன. அதோடு இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களான வேலின், த்ரோயோனைன், ஐசோலூசின், மெத்தியோனைன் மற்றும் டிரிப்டோபான் ஆகியவை உள்ளன. இவை தசைகளின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வெயிட் லாஸ்
ராகியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. எனவே இதை உட்கொள்ளும் போது அது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து, தேவையில்லாத உணவுகளின் மீதான ஆர்வத்தைத் தடுக்கிறது. இதன் விளைவாக எடை இழப்பிற்கு உதவுகிறது.
ராகியில் உள்ள அதிக அளவிலான கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது.
முடி உதிர்வுக்கு தீர்வு
ராகியில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
சர்க்கரை நோய்க்கு நல்லதா?
ராகியில் பாலிபீனால்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, நிலையாக பராமரிக்கவும் உதவுகிறது.
புற்றுநோயைத் தடுக்கும்
புற்றுநோயைத் தடுக்கும் ராகியில் நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. ராகியில் உள்ள லிக்னன் என்னும் ஒரு வகையான சத்து, பெண்களுக்கான மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.