தலை முதல் கால வரை கற்றாழை தரும் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொண்டால், அதை விடவே மாட்டீர்கள். இதன் மருத்துவ குணம் குறித்து இங்கே காண்போம்.
கண் ஆரோக்கியம்
கற்றழை சாற்றை பிரித்தெடுத்து, அதில் மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்து குடித்தால் கண் சார்ந்த பிரச்னைகள் நீங்கும்.
வீக்கம் குறையும்
கற்றாழை ஜெல்லை சூடாக்கி, உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் அல்லது சிவந்த தோல் மீது தடவினால், அவை குறையும்.
முடி வளர்ச்சி
கற்றாழை சாற்றை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வு குறைந்து, அடர்த்தியாக முடி வளரும்.
சருமம் ஜொலிக்கும்
எந்த சருமத்திற்கும் கற்றாழை நல்ல மருந்தாக இருக்கும். கற்றாழை ஜெல்லை நாம் தினமும் தடவி சந்தால், முகத்தில் உள்ள பரு, தடிப்பு, கரும்புள்ளி, கரு வளையம் என அனைத்தையும் நீக்கி சருமத்தை ஜொலிக்கச் செய்யும்.
உடல் சூடு தணியும்
கற்றாழையை பொடியாக்கி, அதனை தினசரி உணவில் சேர்த்து வர உடல் சூடு தணியும்.
உங்களுக்கு ஸ்கின் அலற்ஜி அல்லது வேறு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், கற்றாழையை எடுத்துக்கொள்ளும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.