பழங்காலம் முதலே காயங்களைக் குணப்படுத்த மஞ்சள் தடவப்பட்டு வருகிறது. எத்தனையோ பொருள்கள் இருக்கும் போது, காயங்களுக்கு மஞ்சள் ஏன் பயன்படுகிறது தெரியுமா? காயங்களுக்கு மஞ்சளை பயன்படுத்துவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காண்போம்
விரைவில் குணமாக
மஞ்சளை காயத்தின் மீது தடவி வர, அது விரைவில் குணமாகும். இதற்கு மஞ்சளில் உள்ள கிருமி நாசினி பண்புகளே காரணமாகும். இவை காயத்தை புண் ஆகாமல் தடுக்க உதவுகிறது
வடுக்களை நீக்க
காயங்கள் உடலில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தலாம். இந்நிலையில், காயத்தின் மீது மஞ்சளைத் தடவி வர, வடுக்கள் இருப்பதற்கான அடையாளமே இருக்காது. மேலும் காயத்தின் மீது மஞ்சளைத் தடவுவது தோல் உருவாவதைத் துரிதப்படுத்துகிறது
புற்று புண் வராமல் தடுக்க
ஈக்கள் போன்றவை காயத்தின் மீது எளிதில் ஒட்டிக் கொள்ளலாம். இதனால், காயம் ஆழமாகிறது. இந்த சூழ்நிலையில் காயத்தின் மீது மஞ்சளைத் தடவி வர, அது ஈக்கள் வராமல் தடுக்கும் மற்றும் காயம் புண்ணாக மாறாது
இரத்தப்போக்கு நிற்க
பல சமயங்களில் காயத்திலிருந்து இரத்தப்போக்கு நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். இதற்கு மஞ்சளைத் தடவுவது நன்மை தரும்
வீக்கத்தைக் குறைக்க
காயத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன. எனவே தான் காயத்தின் மீது மஞ்சள் தடவப்படுகிறது
இது போன்ற காரணங்களால் தான் காயத்தின் மீது மஞ்சள் பேஸ்ட் தடவப்படுகிறது