காஃபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா? எப்படி தெரியுமா

By Gowthami Subramani
28 Mar 2024, 08:47 IST

காஃபி அருந்துவது மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் செயல்பாடு, மேம்பட்ட மனநிலை போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். எப்படி தெரியுமா?

குறைக்கப்பட்ட கல்லீரல் ஆபத்து

காஃபி எடுத்துக் கொள்வது கல்லீரல் அழற்சி மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கிறது

கல்லீரல் புற்றுநோய் ஆபத்து

காபி குடிப்பது கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காஃபியில் உள்ள காஃபின் மற்றும் குளோரோஜெனிக் அமிலமே காரணமாகும்

குறைந்த ஃபைப்ரோஸிஸ்

காபி உட்கொள்வது கல்லீரல் ஃபைப்ரோஸிஸின் மெதுவான முன்னேற்றத்துடன் தொடர்புடையதாகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஃபைப்ரோஸிஸின் வளர்ச்சியைத் தடுக்கிறது

இன்சுலின் உணர்திறன் மேம்பாடு

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த காபி உதவுகிறது. இதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைக்கலாம். இது கல்லீரல் தொடர்பான வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம்

கொழுப்பு வளர்சிதை மாற்றம்

காபி நுகர்வு அதிகரித்த கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்துடன் தொடர்புடையதாகும். இது கல்லீரலின் கொழுப்பு திரட்சியைக் குறைக்க உதவுகிறது