கோடையில் உடல் சூட்டை தணிக்க சீரகத்தை இப்படி பயன்படுத்துங்க...!

By Kanimozhi Pannerselvam
22 Mar 2025, 21:55 IST

சீரக தண்ணீர்

1 டீஸ்பூன் சீரகத்தை 1 கப் 5 முதல் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து. காலையில் அதனை வடிகட்டி பருகலாம்.

சீரக தேநீர்

1-2 டீஸ்பூன் சீரகத்தை ஒரு கப் தண்ணீரில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதனை வடிகட்டிசுவைக்காக தேன் அல்லது எலுமிச்சை சேர்த்து பருகலாம்.

சீரக சர்பத்

1 டீஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடியாக்கவும், இதை ஒரு கப் தண்ணீரில் கலந்து, அதில் லெமன் ஜூஸ் மற்றும் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

சீரக சாதம்

சாதத்தை சமைக்கும் போது சீரகத்தை சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கலாம். தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் கூடச் சிறந்தது.

சீரக தயிர்

1 டீஸ்பூன் வறுத்து பொடியாக்கிய சீரகத்தைக் 1 கப் தயிரில் கலந்து கொள்ளலாம். இதை நன்றாகக் கலக்கி தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

சீரகக் காஷாயம்

1 டீஸ்பூன் சீரகத்தை 2 கப் நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிக கட்டி பருகலாம்.