தண்ணீர் நன்மைகள்
உடலுக்கு தேவையான தண்ணீர் என்பது உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. ஆனால் தண்ணீரை முறையாக எப்படி குடிப்பது என பார்க்கலாம்.
எப்படி தண்ணீர் குடிப்பது?
ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் குடிப்பதற்கு சில வழிகள் உள்ளன. அதாவது நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. இது உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும்.
அரை வெப்பநிலை
அதேபோல் தண்ணீர் வெதுவெதுப்பாகவும் அல்லது அரை வெப்பநிலையில் குடிக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் இருந்து தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
வெறும் வயிற்றில் தண்ணீர்
ஆரோக்கியமாக இருக்கு வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் செரிமான பிரச்சனையை எதிர்கொண்டால் சுட வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
அதேபோல் மதிய உணவுக்கு 1 முதல் 1.5 மணிநேரத்திற்கு பிறகும் அல்லது உணவுக்கு பின் 1 முதல் 1.5 மணி நேரத்திற்கு பின்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.