ரத்தம் அழுத்தம் முதல் ஆண்மை குறைபாடு வரை... செம்பருந்தி பூவின் நன்மைகள் இதோ!
By Kanimozhi Pannerselvam
06 Dec 2023, 09:17 IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
செம்பருத்தி பூ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை பி மற்றும் டி செல்களை செயல்படுத்துகின்றன. இவை பல வகையான தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு உதவுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செம்பருத்தி மிகவும் நன்மை பயக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் வருவதை இந்தப் பூ குறைக்கிறது என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.