உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஹெர்ப்ஸ் மற்றும் மசாலாக்கள்

By Gowthami Subramani
12 Jun 2024, 13:30 IST

உயர் இரத்த அழுத்தம்

இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக உயர் இரத்த அழுத்தம் மாறிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்றாக உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் உதவுகின்றன

செலரி

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது ஒரு இயற்கையான தேர்வாக அமைகிறது. இது ஒரு இயற்கையான கால்சியம் சேனல் பிளாக்கராக செயல்பட்டு, இரத்த அழுத்த மேலாண்மையை ஆதரிக்கிறது

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தி விரிவுபடுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

ஏலக்காய்

இது ஒரு சுவையான மசாலா ஆகும். இதை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பங்கை நிறுவ கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது

இஞ்சி

இது இரத்த நாளங்களைத் தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

பூண்டு

பூண்டில் நிறைந்துள்ள அல்லிசின் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். இது உடலில் இரத்த நாளங்களைத் தளர்த்த உதவுகிறது

துளசி

இது சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகையாகும். இவை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு பயனுள்ள உணவு சேர்க்கையாகக் கருதப்படுகிறது

ஆளி விதைகள்

இதில் லினோலெனிக் அமிலம் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும் இதன் எண்ணெய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

அஜ்வைன்

அஜ்வைனில் ரோஸ்மரினிக் அமிலம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது