தலைவலி, வீக்கத்திற்கு உடனடி நிவாரணத்தைத் தரும் ஹெர்பல் டீக்கள்

By Gowthami Subramani
27 Apr 2025, 21:58 IST

சில ஆரோக்கியமான மூலிகை தேநீர் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் எந்தெந்த மூலிகை தேநீர் தலைவலி மற்றும் வீக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு உதவுகிறது என்பது குறித்து காண்போம்

துளசி டீ

துளசியில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் மன அழுத்தத்தை விடுவித்து, தலைவலியிலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது

இஞ்சி தேநீர்

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை தலைவலியைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக ஒற்றைத் தலைவலியாக இருப்பின் இது சிறந்த தீர்வாகும்

மிளகுக்கீரை டீ

புதினாவில் உள்ள மெந்தோல் தசை பிடிப்புகளைக் குறைத்து வலியைக் குறைக்க உதவுகிறது

எலுமிச்சை தேநீர்

எலுமிச்சை சாற்றில் நிறைந்துள்ள அமைதியான பண்புகள் வயிற்று தசைகளை தளர்த்துவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

லாவெண்டர் டீ

லாவெண்டர் டீயை தினமும் உட்கொள்வது மன அழுத்தம் மற்றும் வயிற்று உப்புசத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது

கெமோமில் தேநீர்

இதில் நிறைந்துள்ள அமைதியான பண்புகள் தலைவலி மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது