மூலிகை தேநீர்
சளி, இருமலால் பாதிக்கப்படும் நபர்கள் அதிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கு மூலிகை தேநீரை அருந்தலாம். இதில் சளி, இருமலுக்கு உதவக்கூடிய சில மூலிகை தேநீர் வகைகளைக் காணலாம்
மஞ்சள், இஞ்சி தேநீர்
1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் அல்லது பச்சை மஞ்சளைச் சேர்க்க வேண்டும். இதை 5-7 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி, அதில் தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக குடிக்கலாம்
கெமோமில் புதினா தேநீர்
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கெமோமில், புதினா இலைகள் அல்லது டீ பைகளைச் சேர்க்கலாம். இதை தேநீரை 5-7 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி சூடாக குடிக்க வேண்டும்
இஞ்சி தேன் எலுமிச்சை தேநீர்
இந்த தேநீர் தயார் செய்ய ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நொறுக்கப்பட்ட இஞ்சியைச் சேர்த்து, குறைந்த தீயில் 5-7 நிமிடங்கள் சமைக்க வேண்டும். இதை வெப்பத்திலிருந்து நீக்கி, 5-10 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். பிறகு இஞ்சியை வடிகட்டி, அதில் தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்கலாம்
மிளகுக்கீரை தேநீர்
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் புதிய புதினா இலைகளைச் சேர்த்து, தீயை அணைத்து விட வேண்டும். இதை 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக குடிக்க வேண்டும்
எப்படி குடிப்பது?
இந்த தேநீர் வகைகள் சளி, இருமலுக்கு சிறந்த தீர்வாக இருப்பினும், இதைக் குடிக்கும் போது சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் அளவுக்கு மேல் குடிக்க வேண்டாம் என கூறப்படுகிறது
கர்ப்ப காலம்
கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுத்தாலோ இருமல், சளிக்கு மூலிகை தேநீர் எதுவும் குடிக்க வேண்டாம். இந்த சமயத்தில் மருத்துவர் பரிந்துரைக்கப்படும் தேநீரை அருந்தலாம்
குறிப்பு
இருமல் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தால், காய்ச்சல், மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இது வீட்டு வைத்தியமே தவிர மருத்துவ சிகிச்சை அல்ல