மாதவிடாய் வலி
பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் வலி பொதுவான பிரச்சனையாக இருப்பினும், தாங்க முடியாத ஒன்றாகும். இயற்கையான முறையில் மாதவிடாய் வலி நீங்க சில மூலிகை பானங்களை அருந்தலாம்
இஞ்சி தேநீர்
இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. இது மாதவிடாய் வலியைக் குறைக்கிறது. 1-2 டீஸ்பூன் இஞ்சி சாற்றை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடித்து வர மாதவிடாய் வலி குறையும்
பெப்பர்மின்ட் டீ
மிளகுக்கீரை டீயில் உள்ள மெந்தோல் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மருந்தாக செயல்படுகிறது. இது கருப்பை சுவரின் தசைச்சுருக்கத்தைத் தணித்து வலியைக் குறைக்கிறது
கிரீன் டீ
இதில் டையூரிடிக் பண்புகள் நிறைந்துள்ளது. மாதவிடாயின் போது கிரீன் டீ அருந்துவது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
இலவங்கப்பட்டை டீ
ஆயுர்வேதத்தில் இலவங்கப்பட்டை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தசைகள் சுருங்குவதால் ஏற்படும் வயிற்று வலியைக நீக்குகிறது
கெமோமில் டீ
இந்த தேநீர் அருந்துவது வயிற்றுத் தசைகளை தளர்த்தவும், மாதவிடாய்ப் பிடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் மாதவிடாய் வலியைக் குறைக்கிறது
அலோவேரா
கற்றாழையின் மருத்துவ குணங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிக்கலாம்