நீங்க எப்போதாவது வறுத்த பூண்டு சாப்பிட்டிருக்கிறீர்களா?... எத்தனை ஆரோக்கியமானது பாருங்க!

By Kanimozhi Pannerselvam
01 Jan 2024, 15:30 IST

வறுத்த பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வறுத்த பூண்டை உங்கள் உணவில் சேர்ப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

வறுத்த பூண்டை சாப்பிடுவது ஆண்களின் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

வறுத்த பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. பூண்டு உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துகிறது. இது நம்மை வாட்டி வதைக்கும் சளி மற்றும் இருமலுக்கும் ஒரு தீர்வை வழங்குகிறது.

வறுத்த பூண்டு குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது செரிமான அமைப்பில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது.

பூண்டை தோல் சீவி வைக்கவும். ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடான தவாவில் சுமார் 30-40 நிமிடங்கள் வறுக்கவும். பூண்டை மென்மையாகவும், பொன்னிறமாகவும் வரும் வரை வறுக்கவும்.