பாரிஜாத பூவில் மட்டுமல்ல இலை, பட்டையிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கு!
By Kanimozhi Pannerselvam
15 Mar 2024, 14:29 IST
ஆயுர்வேத மருத்துவத்தின் படி, இந்த தாவரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பட்டைகள் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது பல நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
இதன் இலைகளுக்கு வயிற்றுப் புழுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. பாரிஜாத இலைகளை இடித்து வெந்நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி குடிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி நீங்கும்.
பாரிஜாத இலைகளை அரைத்து தேனில் கலந்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் பாரிஜாத இலைகளை அரைத்து அதன் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமல் நீங்கும்.
பாரிஜாத இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதனுடன் சிறிது துளசி இலைகளை சேர்க்கவும். சளி மற்றும் இருமலுக்கு டீயாக தயாரித்து குடிக்கலாம்
பாரிஜாதத்தின் இலைகள், பட்டை மற்றும் பூக்களை ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை 5 கிராம் 200 கிராம் தண்ணீரில் கலக்கவும். மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் ஆவியாகும் வரை கொதிக்க வைக்கவும். கால் பங்கு தண்ணீர் மட்டுமே இருக்கும் வரை வந்த பிறகு பருகவும்.