இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
செரிமான மேம்பாடு
இஞ்சி செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கம், சளி, இருமல் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை நீக்குகிறது. இதன் மருத்துவ குணங்கள் சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
இஞ்சி சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இஞ்சியில் உள்ள இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவு
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் இன்சுலின் சுரப்பு மற்றும் உணர்திறனுக்கு உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.