குளிர்காலத்துல உடலை சூடாக வைக்க இந்த ஒரு டீ குடிங்க

By Gowthami Subramani
26 Nov 2024, 17:11 IST

குளிர்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பல்வேறு பருவகால நோய்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். குளிர்கால நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும், உடலை ஆரோக்கியமாக வைக்கவும் துளசி மற்றும் அதிமதுர டீ அருந்துவது மிகவும் நன்மை பயக்கும்

பண்புகள்

இந்த துளசி அதிமதுர டீ பானமனது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் துளசி அதிமதுர டீ அருந்துவதன் நன்மைகளைக் காணலாம்

சுவாச பிரச்சனைகளை நீக்க

குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளைத் தீர்க்க இந்த மூலிகைகள் உதவுகிறது. இருமல், சளி, ஆஸ்துமா அறிகுறிகளை நீக்க இந்த டீயை அருந்தலாம்

சூடாக வைக்க

குளிர்ந்த காலநிலையில் ஒரு கப் துளசி முலேத்தி தேநீரை சூடாக அருந்துவது நம்மை சூடாகவும், வசதியாகவும் வைக்க உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

தொண்டை வலி குறைய

துளசி மற்றும் முலேத்தி இரண்டுமே தொண்டை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது எரிச்சலைக் குறைக்க உதவும் இனிமையான பண்புகளைக் கொண்டுள்ளது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

துளசி மற்றும் முலேத்தி இரண்டுமே நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இவை குளிர்கால நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

துளசியில் அடாப்டோஜெனிக் பண்புகள் உள்ளது. இது தளர்வை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது

எப்படி தயாரிப்பது?

துளசி மற்றும் முலேத்தி தேநீர் தயார் செய்ய, ஒரு கப் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் துளசி இலைகள் மற்றும் ஒரு சிறிய துண்டு மூலேத்தி வேர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை 5-7 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி பிறகு விரும்பினால் தேன் சேர்க்கலாம்