கொய்யா இலை தரும் ஆச்சிரியமூட்டும் நன்மைகள்

By Ishvarya Gurumurthy G
15 Feb 2024, 10:07 IST

நீரிழிவு நோயை மேம்படுத்துவது முதல், கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பது வரை, கொய்ய இலையில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

நீரிழிவு மேலாண்மை

தினமும் கொய்யா இலை டீ குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது நீரிழிவு நேயாளிகளின் தோழனாக திகழ்கிறது.

எடை குறையும்

கொய்யா இலை டீயை குடித்தால், பசி கட்டுப்படும். இதனால் அதிகம் சாப்பிடுவது கட்டுப்படும். இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

செரிமானம் மேம்படும்

கொய்யா இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வந்தால், குடல் சார்ந்த பிரச்னைகள் தீரும். இதனால் செரிமானம் மேம்படும்.

அழகான சருமம்

கொய்யா இலையில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் சரும பிரச்னைகளை தடுக்கிறது. இது சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளித்து, சருமத்தை பொலிவாக்குகிறது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யா இலையில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் வைரஸ் தோற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

கொழுப்பு குறையும்

தினமும் கொய்யா இலை டீ குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். இதனால் இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.