இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளுக்கு நல்லது.
சரும பராமரிப்பு
கருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன, அவை தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
புற்றுநோய்
புற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது.
மாதவிடாய் வலி
மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.
கழிவு நீக்கம்
கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும். உடலில் உள்ள நச்சுகள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற வழிவகுக்கும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும்.
நினைவாற்றல்
கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ,பி,பி12, நியாசின், சி ஆகியவை உள்ளன. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளை தடுக்கிறது.
எடையிழப்பு
ஆய்வுகளின் படி, கருஞ்சீரகத்திற்கு பசியைக் கட்டுப்படுத்தும் திறனுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் தினமும் இதனைச் சாப்பிட்டால் குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும்.
வீக்கம்
கருஞ்சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட கலவைகள் அதிகம் உள்ளன. இது உடலில் வீக்கத்தை குறைக்கும்.