ஆயுர்வேத முறைப்படி, சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு உதவிபுரிவதாக அமைகிறது
நெய்
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. மேலும் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவக்கூடியதாக அமைகிறது
அஸ்வகந்தா
இது ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதற்கும், நரம்பு மண்டலத்தை ஆதரிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது
திரிபலா
திரிபலா என்பது அமலாகி, ஹரிட மற்றும் பிபிதாகி போன்ற மூன்று பழங்களின் கலவையாகும். இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது
ஆம்லா
இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
வெந்தய விதைகள்
இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது
மஞ்சள்
இதில் குர்குமின் உள்ளது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்
துளசி
துளசியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், சுவாச ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது
இஞ்சி
இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான பண்புகள் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது