இயற்கை முறையில் முகத்தைப் பொலிவாக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் ஆயுர்வேதம் சிறந்த நன்மைகளைத் தரும். இதில் ஒளிரும் சருமத்திற்கு என்னென்ன ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்
முல்தானி மிட்டி மற்றும் வேம்பு
முல்தானி மிட்டியுடன் வேப்பம்பூ பொடியைக் கலக்க வேண்டும். இதில் சில துளிகள் ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும். இதை சருமத்தில் அப்ளை செய்து, காய்ந்த பின் எடுத்து விடலாம்
தேன் மற்றும் ஆலோவேரா
கற்றாழை ஜெல்லை தேனுடன் கலந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும்
தயிர் மற்றும் ஆரஞ்சு
உலர்ந்த மற்றும் தூள் ஆரஞ்சு தோலுடன் தயிரைக் கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவி விடலாம்
மஞ்சள் மற்றும் கடலை மாவு
ஒரு சிட்டிகை மஞ்சளுடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்க்க வேண்டும். இதில் போதுமான ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்க்கவும். இதை முகத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவிக் கொள்ளலாம்
பப்பாளி மற்றும் தேன்
பழுத்த பப்பாளியை மசித்து தேன் கலந்து கொண்டு, இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவலாம்
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவ வேண்டும். இது காய்ந்த பிறகு கழுவிக் கொள்ளலாம்
எலுமிச்சை மற்றும் கடலை மாவு
சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஸ் வாட்டருடன் கடலை மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். பேக்கை முகத்தில் தடவி, இவை காய்ந்த பிறகு பின் கழுவிக் கொள்ளலாம்
தயிர் மற்றும் வெந்தயம்
வெந்தயத்தை ஒரு இரவில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, தயிருடன் கலக்க வேண்டும். இந்த பேக்கைத் தடவி காய்ந்த பிறகு கழுவலாம்
பாதாம் மற்றும் பால்
பாதாமை இரவில் ஊறவைத்து, தோலுரித்து பாலுடன் கலந்து கலவை தயார் செய்யவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளலாம்
இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை பொலிவாக வைத்திருக்கலாம். எனினும் சருமம் உணர்திறன் மிக்கதென்பதால், புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது