உடல் நச்சுக்களை நீக்கும் சூப்பரான ஆயுர்வேத பானங்கள்

By Gowthami Subramani
17 Apr 2024, 14:59 IST

உடலில் ஏற்படும் நச்சுத் தன்மையால் சோர்வு, செரிமான பிரச்சனை, தலைவலி, தோல் பிரச்சனைகள், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஆயுர்வேதத்தில் நச்சுத்தன்மையை நீக்க டிடாக்ஸூக்கு பல வழிகள் உள்ளன. இந்த டிடாக்ஸ் பானங்கள் எளிதில் தயாரிக்கப்படுவதுடன், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ

இஞ்சி சிறந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த இரண்டின் கலவையே உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது

CCF தேநீர்

சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகத்தின் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம். இந்த டீ தயாரிக்க, இந்த மூன்றையும் சேர்த்து சூடான நீரில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்

மஞ்சள் மற்றும் தேன் பால்

மஞ்சள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளுடன் தேன் மற்றும் பால் தயாரிக்க பாத்திரம் ஒன்றில் ஒரு கப் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சூடாக குடிக்க வேண்டும்

திரிபலா தேநீர்

திரிபலா நச்சு நீக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை வெதுவெதுப்பான நீரில் 5-10 நிமிடங்கள் ஊறவைத்து, பின் இனிப்புக்காக தேன் சேர்த்து அருந்தலாம்

அலோவேரா ஜூஸ்

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட அலோவேரா சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. கற்றாழையிலிருந்து ஜெல்லைத் தனியே பிரித்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்