இரவில் உப்பு நீரால் வாய் கொப்பளித்தால் என்ன ஆகும்?

By Ishvarya Gurumurthy G
23 Jan 2024, 23:15 IST

தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் என்ன ஆகும் தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

வாய் துர்நாற்றத்தை நீங்கும்

இரவில் தூங்கும் முன் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும். உப்பு இயற்கையான வாய் புத்துணர்ச்சியாக செயல்படுகிறது.

வாய் புண்கள் ஆறும்

வாய் புண்களை குணப்படுத்த, இரவில் தூங்கும் முன் உப்பு நீரில் கழுவவும். உப்பில் உள்ள பண்புகள் புண்களை குணப்படுத்த உதவுகிறது.

தொண்டைக்கு நன்மை பயக்கும்

குளிர் காலத்தில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்னைகள் கணிசமாக அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த தொண்டை தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெற, உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும். உப்பு வாய் பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது.

பற்களுக்கு நன்மை பயக்கும்

உப்பு நீர் பற்களுக்கு நன்மை பயக்கும். உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் பற்களில் உள்ள புழுக்கள் நீங்கும். மேலும், உங்கள் பற்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.

சளி பிரச்சனை நீங்கும்

மார்பில் படிந்திருக்கும் சளியை வெளியேற்ற உப்பு நீர் உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் உப்பு சேர்த்து தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் வாய் கொப்பளிக்கவும்.