பெண்கள் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இந்த ஒரு இலையை சாப்பிடுங்க

By Gowthami Subramani
19 Jan 2024, 13:17 IST

முருங்கை இலைகள் ஆயுர்வேத குணங்களுக்கு பெயர் பெற்றவையாகும். இந்த இலைகள் ஆண்கள், பெண்களின் பல்வேறு கடுமையான பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சையாக உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு முருங்கை இலைகள் என்னென்ன நன்மைகள் பயக்கும் என்பதைக் காண்போம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

முருங்கை இலையில் வைரஸ் எதிர்ப்பு, மன அழுத்த எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது தவிர துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை இதில் உள்ளது

மாதவிடாய் பிடிப்புகள்

முருங்கை இலைகளை சாப்பிடுவது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தர உதவுகிறது. இந்த இலைகள் பிடிப்புகள், வீக்கம், வயிற்று வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

குளிர்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தைக் குறைக்கலாம். இதற்கு முருங்கையின் பயன்பாடு பெரிதும் உதவுகிறது. இந்த இலைகளில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது

முதுமை எதிர்ப்பு

முருங்கை இலைகளில் வைட்டமின் சி, குர்செடின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இவை சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் சரும செல்கள் சேதமடையாமல், கருவளையம் மற்றும் சுருக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்

சர்க்கரை நோய்

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நீரிழிவு நோயெதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இதய ஆரோக்கியம்

முருங்கை இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை உடலில் வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

மன ஆரோக்கியம்

மனச்சோர்வு உள்ளவர்கள் முருங்கை இலைகளைப் பயன்படுத்தலாம். இது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. முருங்கை இலைகளை உட்கொள்வது குறைந்த மன அழுத்தத்தை உணரலாம்

முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம் மேலே கூறப்பட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்