சம்மர்ல தினமும் 1 ஸ்பூன் நெய் தரும் ஆரோக்கிய மகிமைகள்

By Gowthami Subramani
09 May 2024, 13:30 IST

ஆயுர்வேதத்தின் படி, நெய் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கோடை காலங்களில் உடல் வெப்பமடையும் போது நெய்யை உட்கொள்வது வெப்பத்தை சமன் செய்யவும், குளிர்ச்சி உணர்வையும் தருகிறது

ஊட்டச்சத்துக்கள்

நெய்யில் அத்தியாவசிய மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஊட்டமளித்து மூட்டுகள் மற்றும் திசுக்களை ஆதரிக்கிறது. கோடையில் இது வறட்சியைத் தடுக்கவும், உடல் திசுக்களை நன்கு நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது

நீரேற்றமிக்க

நெய் உடலுக்கு நீரேற்றத்தைத் தருகிறது. எனவே கோடையில் வெப்பம் மற்றும் அதிக வியர்வையால் உண்டாகும் நீரிழப்பைத் தவிர்க்கவும், உடலை நீரேற்றமாக வைக்கவும் நெய்யை உட்கொள்ளலாம்

செரிமான மேம்பாட்டிற்கு

ஆயுர்வேதத்தில் நெய் சிறந்த செரிமானத்தைத் தருவதாகக் கருதப்படுகிறது. இது உணவை உறிஞ்சுவதற்கும், செரிமானம் அடையவும் உதவுகிறது. மேலும் வயிற்று அமிலங்கள் சுரப்பைத் தூண்டி வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது

ஆற்றல் மேம்பாட்டிற்கு

நெய் உட்கொள்வது உடலுக்கு விரைவான மற்றும் நிலையான ஆற்றலைத் தருகிறது. கோடையில் உடல் ஆற்றல் அதிகம் செலவிடும் போது நெய்யை உட்கொள்வது சுறுசுறுப்பாகவும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகவும் அமைகிறது

பித்த தோஷத்தை சமப்படுத்த

ஆயுர்வேதத்தின் படி, கோடைக்காலத்தில் பித்த தோஷம் அதிகமாக இருக்கும். இதுவே உடலில் செரிமானம், வெப்பம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை நிர்வகிக்கிறது. நெய் குளிரூட்டும் விளைவைத் தருவதால், அதிகப்படியான பித்தத்தை சமப்படுத்துகிறது

பொறுப்புத் துறப்பு

நெய் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. எனினும் குறிப்பாக குறிப்பிட்ட சுகாதார நிலைமைகள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது. எனவே ஆயுர்வேத பயிற்சியாளர் அல்லது சுகாதார பராமரிப்பு வழங்குனருடன் கலந்தாலோசிக்க வேண்டும்