குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இந்த பொருட்களை சேர்க்கவும்!

By Ishvarya Gurumurthy G
09 Jan 2024, 12:48 IST

இஞ்சி மிளகு பட்டை போன்ற மசாலாப் பொருட்கள், குளிர்காலத்தில் எவ்வளவு நன்மைகளை கொடுக்கும் தெரியுமா? இங்கே காண்போம் வாருங்கள்.

எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, இஞ்சி பொடி சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.

செரிமான அமைப்பு மேம்படும்

நீங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த விரும்பினால், இந்த மூன்று மசாலாப் பொருட்களை தினமும் உட்கொள்ளுங்கள். இவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் வாயு, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

எடையை குறையும்

குளிர்காலத்தில் எடை வேகமாக அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு மற்றும் இஞ்சி பொடியை ஒன்றாக கலந்து குடிக்கவும்.

தொண்டை புண் குணமாகும்

இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு மற்றும் இஞ்சி தூள் தொண்டை புண் குணப்படுத்த உதவுகிறது.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு மற்றும் இஞ்சி தூள் சேர்த்து இரவு தூங்கும் முன் சாப்பிடுங்கள்.