எப்வொவும் இளமையா இருக்க இந்த ஆயுர்வேத டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
11 Mar 2024, 10:14 IST

முதுமையிலும் இளமையான சருமத்தைப் பெற பலரும் விரும்புவர். இதில் சருமத்தை இளமையாக வைக்க உதவும் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காணலாம்

ஃபேஸ் மசாஜ்

முகத்திற்கு மசாஜ் செய்வது பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறையாகும். சில அத்தியாவசிய எண்ணெயின் துளிகள் சேர்த்து மசாஜ் செய்யலாம்

பால்

சருமம் வறண்டு போவதைத் தடுக்க பால் உபயோகிக்கலாம். இது சருமத்தின் துளைகளில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த உதவுகிறது

தேன்

தேன் ஒரு சிறந்த இயற்கையான மாய்ஸ்சரைசராகும். முகம் முழுவதும் தேன் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம்

யோகா

யோகா மற்றும் பிராணயாமா போன்றவற்றின் மூலம் இளமையாக மற்றும் அழகாகவும் வைக்கலாம்

நிறைய தண்ணீர் குடிப்பது

உடலை நீரேற்றமாக வைக்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். இதற்கு நீரேற்றமிக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளலை அதிகரிக்கலாம்