உலர் கண் நோய்க்குறிக்கான சிறந்த ஆயுர்வேத முறைகள்

By Gowthami Subramani
09 Jul 2024, 13:30 IST

உலர் கண் நோய்க்குறி, கெரடோகான்ஜுன்க்டிவிடிஸ் சிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. கண்கள் போதுமான கண்ணீரை அல்லது சரியான தரமான கண்ணீரை உற்பத்தி செய்யாத போது உலர் கண் நோய் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க சில ஆயுர்வேத சிகிச்சை வழிகள் உள்ளன

கற்றாழை ஜெல்

இது ஈரப்பதமூட்டும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். புதிய கற்றாழை ஜெல்லை கண்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, கண்களைச் சுற்றி பயன்படுத்தும் போது வறண்ட கண் பிரச்சனையைத் தவிர்க்கலாம்

திரிபலா

திரிபலா சுத்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறவைக்க வேண்டும். பின் இதன் குளிரூட்டப்பட்ட கரைசலை கண்களை கழுவுவதற்கு பயன்படுத்தலாம். இது வறட்சியைப் போக்கவும், கண்களைச் சுத்தப்படுத்தவும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

வெள்ளரித் துண்டு

கண்களை மூடி, அதன் மேல் வெள்ளரித் துண்டுகளை வைப்பது வறட்சி மற்றும் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணத்தைத் தருகிறது. ஏனெனில் வெள்ளரி குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கண்களை நீரேற்றமாக வைக்கவும், எரிச்சலைத் தணிக்கவும் உதவுகிறது

ஆமணக்கு எண்ணெய்

குளிர் அழுத்தப்பட்ட, சேர்க்கை இல்லாத ஆமணக்கு எண்ணெய் உலர் கண்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். படுக்கைக்கு முன், ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துளி ஆமணக்கு எண்ணெயை வைக்கலாம். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கண் எரிச்சலைத் தணித்து வறட்சியிலிருந்து நிவாரணம் தருகிறது

ரோஸ் வாட்டர்

வறண்ட கண்களுக்கு ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த தீர்வாகும். இது கண்களுக்குப் புத்துணர்ச்சி மற்றும் நீரேற்றத்தை அளிக்கிறது. மேலும் இதன் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தணிக்கிறது

கண் சிமிட்டும் பயிற்சி

வழக்கமான கண் சிமிட்டும் பயிற்சிகள் கண்களின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், கண்களின் வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. கண் சிமிட்டுவது இயற்கையான கண்ணீரை கண் மேற்பரப்பில் சமமாக பரப்புகிறது. இவை கண் அழுத்தத்தைக் குறைத்து ஈரப்பதத்தை பராமரிக்கிறது

குறிப்பு

இந்த ஆயுர்வேத முறைகள் உலர் கண் நோய்க்குறி பிரச்சனையை வராமல் தடுக்க உதவும் பொதுவான சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. எனினும் இது குறித்த தீவிர ஆலோசனைகளுக்கு மருத்துவர்களிடம் கலந்துரையாடலாம்