மழைக்காலம் வந்தாலே தொட்டை வலியுடன் போராட்டமா.? இதில் இருந்து எளிதில் விடுபட உதவும் ஆயுர்வேத வைத்திய முறையை இங்கே காண்போம்.
மஞ்சள் பால்
சளி அல்லது காய்ச்சல் இருந்தால் மஞ்சள் கலந்த பால் குடிப்பது நல்லது. பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் தொண்டை வலி நீங்கும். இது தொண்டையில் உள்ள புண்களை நீக்கி உங்களுக்கு வழியில் இருந்து நிவாரணம் தரும்.
அதிமதுரம்
அதிமதுரம் தொண்டை வலியைப் போக்க சிறந்த மூலிகை. தொண்டை புண், வலி மற்றும் இருமல் போன்றவற்றுக்கு அதிமதுரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சி டீ
இஞ்சி டீயும் தொண்டை வலியை போக்க உதவும். அதில், சில துளசி இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி டீ தொண்டை வீக்கத்தை குறைக்கிறது.
தேன்
தொண்டை வலியை நீக்குவதில் தேன் அருமருந்து. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகலாம் அல்லது கருப்பு மிளகு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
திரிபலா நீர்
திரிபலா பொடியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, கரைசலை வடிகட்டவும். மூன்று பழங்களின் கலவையான திரிபலா, தொண்டை வலியைப் போக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பைக் கலக்க வேண்டும். உப்பு நீர் வாய் கொப்பளிப்பது வீக்கத்தைக் குறைக்கவும், தொண்டையை ஆற்றவும், சளியைத் தளர்த்தவும் உதவுகிறது.