கோடையில், சூரிய ஒளி, தூசி மற்றும் வியர்வை பிரச்னையால் தோல் அலர்ஜி பிரச்னையை மக்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும். இதிலிருந்து விடுபட சில வழிகள் இங்கே.
வேப்பிலை
அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வேப்பில் காணப்படுகின்றன. இதற்கு வேப்பம்பூ நீரில் குளிக்கலாம் அல்லது வேப்ப எண்ணெய் தடவலாம். இது தோல் அலர்ஜியை குறைக்க உதவுகிறது.
துளசி
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசிக்கு ஒவ்வாமை எதிர்ப்பு தன்மை உள்ளது. சரும அலர்ஜியை நீக்க, துளசி இலையை பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி, காய்ந்த பின், தண்ணீரில் கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் தேங்காய் எண்ணெயில் உள்ளன. தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவுவது தோல் ஒவ்வாமை மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது.
கற்றாழை
ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் கற்றாழையில் உள்ளன. கற்றாழை ஜெல்லை தோலில் தடவுவது சரும அலர்ஜியை குறைக்க உதவுகிறது.