கீழ் முதுகில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதை குணப்படுத்த சில ஆயுர்வேத வைத்தியங்கள் இருக்கிறது. இது குறித்து இங்கே காண்போம்.
சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய் ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது உடலின் உள்ளேயும் வெளியேயும் பல பகுதிகளில் வலியைக் குறைக்கும் திறன் கொண்டது. இது நரம்பு மண்டலத்தை காத்து, பிரச்னையை கட்டுபடுத்துகிறது.
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலெற்சி எதிர்ப்பு கலவைகள் உடலில் எந்த விதமான வலியையும் குறைக்கும். மேலும் தசை திசுக்களை சிறப்பாகச் செயல்படச் செய்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். முதுகு வலி மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த, இஞ்சி சிறந்த ஆயுர்வேத தீர்வாக இருக்கிறது.
மஞ்சள்
உடலில் வீக்கம் மற்றும் வலியுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க நீண்ட காலமாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இது மூட்டுவலி மற்றும் நெஞ்செரிச்சல் வலியைக் குறைக்க உதவுகிறது.
ஓமம்
கீழ் முதுகு வலியைக் குறைக்க ஓமம் பயன்படும். இது வலியை குறைப்பதற்கும், உங்கள் உடலுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.