பெண்களின் ஹார்மோன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்
By Kanimozhi Pannerselvam
10 Mar 2024, 01:37 IST
நெருஞ்சி
இந்திய ஆயுர்வேத மூலிகையான இது, பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும் உதவுகிறது. மேலும் தினமும் நெருஞ்சியை உட்கொள்வது பிசிஓஎஸ் பிரச்சனையில் இருந்து நிரந்தர தீர்வளிக்கும் எனக்கூறப்படுகிறது.
சாத்தாவாரி
தண்ணீர் விட்டான் கிழங்கு என தமிழில் அழைக்கப்படும் சாத்தாவரி பெண்களின் தோழி என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பாலூட்டும் தாய்மார்கல் முதல் கருவுறுதல் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற ஹார்மோன் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
ஷிலாஜித் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற பெண் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா என்ற பழங்கால ஆயுர்வேத மூலிகை பெண் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் திறன் கொண்டது. 2019 ஆம் ஆண்டின் வெளியான ஆய்வின் படி, அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைக்கிறது,பதற்றம், மனச்சோர்வு மற்றும் தூக்கப் பிரச்சினைகள் போன்ற ஹார்மோன் சமநிலையின்மைக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிராமி
பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு பெண் அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கும் போது அவர்களின் உடல் அதிக கார்டிசோலை உருவாக்கத் தொடங்குகிறது, இதனால் ஹார்மோன் உற்பத்தியில் ஏற்படும் சமநிலையின்மையை சரி செய்ய உதவுகிறது.