தோல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பது முதல் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது வரை, செம்பருத்தி பூவின் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இங்கே.
ஆயுர்வேதத்தில் செம்பருத்தி பயன்கள்
அதன் மருத்துவ குணங்கள் காரணமாக, செம்பருத்தி பூ ஆயுர்வேதத்தில் தோல் நோய்த்தொற்றுகள், இரத்த அழுத்தத்தை பராமரிப்பது போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இரத்த அழுத்தம் குறையும்
செம்பருத்தி தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்கும்
செம்பருத்தியில் மருத்துவ குணங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பருவகால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியம்
செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கல்லீரல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்
செம்பருத்தியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
செம்பருத்தி பூக்களை எப்படி பயன்படுத்துவது?
2-3 செம்பருத்தி பூக்களை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த மருத்துவ குணம் கொண்ட செம்பருத்தி டீயை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
மருத்துவ பயன்கள்
நம்பகமான சுகாதார இணையதளமான 'வெப்எம்டி' படி, செம்பருத்தி பூக்களின் சில மருத்துவ பயன்கள் இவை.
செம்பருத்திப் பூக்களின் மருத்துவப் பயன்கள் இவை. எந்தவொரு ஆயுர்வேத தீர்வையும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.