எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள் இங்கே

By Ishvarya Gurumurthy G
12 Feb 2024, 16:29 IST

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மூலிகைகள் உங்களுக்கு உதவலாம். இதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை இங்கே.

கிலோய்

கிலோயில் நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. கிலோயில் தண்ணீரில் கலந்து குடித்து வரும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதிமதுரம்

வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராடும் சக்தி அதிமதுரத்தில் நிறைந்துள்ளது. இதனை டீயில் கலந்து குடித்து வர எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

துளசி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி டீயை குடிக்கவும். மேலும் இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, பி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.