இன்றைய காலத்தில் பலரும் சோர்வு அல்லது மன அழுத்தத்தைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், ஒரு கப் சூடான மூலிகை தேநீர் பெரிதும் உதவும். இது நரம்புகளை அமைதிப்படுத்தவும், பதட்டத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மூலிகைகளைக் காணலாம்
லாவண்டர் தேநீர்
லாவண்டர் தேநீரானது ஒரு மலர் போன்ற மங்கலான நறுமணத்தைக் கொண்டதாகும். இதை அருந்துவது மேம்பட்ட தூக்கத்திற்கு உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நீண்ட நாள் கழித்து ஓய்வெடுக்க ஏற்றதாகும்
அஸ்வகந்தா டீ
இது மன அழுத்த ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் திறனைக் கொண்டதாகும். இதன் விளைவாக, வலிமை மற்றும் மன நல்வாழ்வு ஏற்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு மன அழுத்த மேலாண்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
பெப்பர்மின்ட் டீ
பெப்பர்மின்ட் தேநீர் அருந்துவது பதற்றம், சோர்வு, தசைப்பிடிப்பு மற்றும் செரிமானப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது குளிர்ச்சியான மற்றும் தளர்வு விளைவுகளைத் தருகிறது
எலுமிச்சை தைலம் டீ
இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைக்கிறது. இந்த டீ அருந்துவது இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்த நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது
கெமோமில் டீ
இந்த டீ அருந்துவது மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து தேவையற்ற பதற்றத்தைத் தணிக்கவும், தளர்வாக வைக்கவும் உதவுகிறது