பப்பாளி இலை ஜூஸ் குடிச்சா... இந்த பிரச்சனைகள் எல்லாம் அடியோட போய்டும்!

By Kanimozhi Pannerselvam
04 Oct 2024, 13:30 IST

செரிமான ஆரோக்கியம்

மலச்சிக்கல், வீக்கம் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்ற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி இலை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

டெங்கு சிகிச்சை

பப்பாளி இலையை கொதிக்கவைத்த நீரை பருகினால் டெங்கு காய்ச்சல் குணமாகும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

ஆக்ஸினேற்ற பண்புகள்

பப்பாளி இலைகளில் வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ மற்றும் பல ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. செல் சேதத்தைத் தடுக்கிறது.

வீக்கத்தை குறைக்கும்

பப்பாளி இலையில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மூட்டு வலி, தசை வலி அல்லது பிற அழற்சி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நன்மை பயக்கும்.

கல்லீரல் ஆரோக்கியம்

பப்பாளி இலையில் உள்ள அசிட்டோஜெனின்கள் கல்லீரலை அழுக்கிலிருந்து பாதுகாக்கின்றன. அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. இது கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. சிறப்பாக செயல்பட உதவுகிறது.