அதிமதுரம் எதையெல்லாம் குணப்படுத்தும் தெரியுமா?

By Ishvarya Gurumurthy G
27 Jan 2024, 14:10 IST

அதிமதுரத்தை எந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இதனை எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

சளி காய்ச்சல்

சளி காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ வெதுவெதுப்பான நீரில் அதிமதுரம் மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.

வறட்டு இருமல்

உங்களுக்கு வறட்டு இருமல் பிரச்னை இருந்தால், அதிமதுரம் தேனீர் செய்து குடிக்கலாம். இது நல்ல தீர்வாக இருக்கும்.

பீடியட்ஸ் வலி

மாதவிடாய் நேரத்தின் போது ஏற்படும் தசைப்பிடிப்பு, வலி போன்றவற்றை குறைக்க அதிமதுரம் உதவும்.

பார்வைத்திறன்

மங்கலான பார்வை போன்ற பார்வை குறைபாடு கொண்டவர்கள் அதிமதுரம் உட்கொள்ள வேண்டும். இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட அதிமதுரம் உதவும்.

மனநலம்

இன்றைய வாழ்க்கைமுறையில் மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்றவை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அதிமதுரம் உதவுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில், அதிமதுரம் சிறந்த பங்கு வகிக்கிறது.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் சங்கடத்தை ஏற்படுத்தும். இதனை போக்க அதிமதுரத்தை மென்று சாப்பிடவும். இது வாய் துர்நாற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.