இந்த 5 மூலிகைகள் உங்கள் வீட்டில் எப்போதும் இருப்பது நல்லது!

By Karthick M
16 Aug 2024, 13:26 IST

ஆரோக்கியமான வாழ்விற்கு ஆயுர்வேதம் என்பது பிரதான ஒன்று. வீட்டில் சில மூலிகைகள் இருப்பது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

பக்கவிளைவுகள் இல்லாத ஆயுர்வேதத்தை அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக 5 மூலிகைகளை வீட்டில் எப்போது வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

வில்வம்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க வில்வ இலைகளை பயன்படுத்துகின்றனர். வில்வ இலை பொடியை உட்கொள்வது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

வேப்பிலை

நல்ல கசப்புடன், இரத்தத்தை சுத்திகரிக்கவும், தோல் பிரச்சனைகளை குணப்படுத்தவும் வேம்பு அரிய மூலிகையாக உள்ளது.

வெற்றிலை

கால்சியத்தை அதிகரிக்கவும் பலவீனமான எலும்புகளை சரிசெய்யவும் வெற்றிலை உதவும். செரிமானத்திற்கு, வாய் துர்நாற்றத்திற்கும் வெற்றிலை மிக நல்லது.

துளசி

சளி. காய்ச்சலை குறைக்க துளசியை விட சிறந்த மருந்து இல்லை. இது தொற்றுநோயைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை முடியின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கறிவேப்பிலை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.