ஆச்சர்யமூட்டும் கனவா மீனின் மருத்துவ குணங்கள்!

By Kanimozhi Pannerselvam
06 May 2025, 21:34 IST

சத்துக்களின் சுரங்கம்

ஒமேகா 3 ஊட்டச்சத்துடன் 90 சதவீதம் காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடைய செலினியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டத்திற்கு வலுசேர்க்கிறது.

இதய ஆரோக்கியம்

கனவா மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் ஏராளமாக உள்ளது, குறிப்பாக DHA மற்றும் EPA அதிகமுள்ளது. இது மூளை வளர்ச்சி, இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

எலும்புகளுக்கு கூடுதல் பலம்

கனவா மீனில் காணப்படும் கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகிறது.

எடையிழப்பு

புரதம் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், கனவா மீன் வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

தீராத நோய்களை தீர்க்கும்

ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாத்து நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்

வைட்டமின் பி1, பி2, பி3, ஏ, டி, இ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க விடாமல் சீராக வைத்திருக்கும்.