ஆட்டின் சுவரொட்டி பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் சிலருக்கு ஒவ்வாத உணவாக இருக்கிறது. இதன் நன்மைகளை அறிந்தால் கண்டிப்பாக சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்.
இரத்த சோகை
இரத்த சோகை வராமல் தடுக்கிறது ஆட்டுமண்ணீரல் எனப்படும் சுவரொட்டி இரத்த சிவப்பணுக்களை அதிகமாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கிறது. சுவரொட்டிகளில் அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளன.
வலுவான நோயெதிர்ப்பு
வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தி தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
இரும்புச்சத்து தேவை
வெறும் 50 கிராம் சுவரொட்டி என்பது நமது தினசரி இரும்புச்சத்து தேவையில் 100% பூர்த்தி செய்கிறது.
பெருங்குடல் அழற்சி
பெருங்குடல் அழற்சிக்கு ஆட்டு சுவரொட்டி மிக சிறந்த மருந்தாகும்! சுவரொட்டி சாப்பிடுவதால் பெருங்குடல் அழற்சி வராமல் தடுக்க படுகிறது.
முடக்கு வாதம்
முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு சுவரொட்டி மிக பயனுள்ள சிறந்த உணவாகும். சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் முடக்கு வாதத்தை சீராக்குகிறது இவர்கள் வாரம் ஒரு முறை அவசியம் சாப்பிட வேண்டும்.