ஹேர் ட்ரையரில் இருந்து வெளிப்படும் வெப்பம் உங்கள் தலைமுடியை சேதப்படுத்துகிறது. இது உங்கள் தலைமுடியில் இருந்து இயற்கையான எண்ணெயை நீக்குகிறது, இதனால் முடி வறண்டு பலவீனமாகிறது.
முடி உதிர்தல்
தலைமுடியை காய வைக்க அடிக்கடி ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தினால், அதன் வெப்பத்தால் முடி உடைந்து வலிமை இழக்கிறது. மேலும் இதிலிருந்து வெளிப்படும் வெப்பம் முடியின் தண்டை சேதப்படுத்தி, முடி உதிர்வதற்கு காரணமாகிறது.
ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவதால் கூந்தலில் இருந்து இயற்கையான எண்ணெய் வெளியேறுகிறது.. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும்.
நரை முடி
நீங்கள் தினமும் ஹேர் ட்ரையர் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடியில் மெலனின் குறைபாடு ஏற்படலாம். இதன் காரணமாக முடி அதன் கருமையை இழந்து விரைவிலேயே நரைக்க ஆரம்பிக்கும்.
கண்களுக்கும் பாதிப்பு
ஹேர் ட்ரையர் முடிக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. அதிலிருந்து வெளிவரும் அனல் காற்று நம் கண்களில் எரிச்சல், அரிப்பு, சிவத்தல் மற்றும் வறட்சியை ஏற்படுத்துகிறது.