நெய் சருமத்திற்கு பல அற்புதங்களை செய்கிறது. இதனை இரவில் உதட்டில் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.
மென்மையை அளிக்கும்
தினமும் தூங்கும் முன் உதடுகளை நெய் கொண்டு மசாஜ் செய்யவும். மேலும், காலையில் சாதாரண நீரில் கழுவவும். இப்படி செய்வதால் உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.
வறட்சி நீங்கும்
நெய்யில் இயற்கையான சரும ஈரப்பதமூட்டும் தன்மை உள்ளது. இதை தடவினால் உதடுகளின் வறட்சி நீங்கும். இதனால் உதடு வெடிப்பு பிரச்னை நீங்கும்.
உதடு சிவப்பாகும்
உதடுகளுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்க, தூங்கும் முன் அவற்றை நெய் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யவும்.
இறந்த செல் நீங்கும்
உங்கள் முகத்தில் உள்ள தோலைப் போலவே, உதடுகளிலும் இறந்த சருமம் குவிந்துவிடும். அதை சுத்தம் செய்ய நெய்யின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்.
கருமையை நீக்கும்
இயற்கையாகவே உதடுகளின் கருமையை நீக்க நெய்யில் மசாஜ் செய்யலாம். இது தோல் நிறத்தை மேம்படுத்துகிறது.
உதட்டில் நெய் தடவுவது எப்படி?
முதலில் 2 முதல் 3 சொட்டு நெய்யை எடுத்துக் கொள்ளவும். விரல்களின் உதவியுடன் உதடுகளில் தடவவும். இப்போது நெய் முழுமையாக உதடுகளில் உறிஞ்சப்படும் வரை உதடுகளை மெதுவாக மசாஜ் செய்யவும்.