குழந்தைகளுக்கு ப்ளூபெர்ரி
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ப்ளூபெர்ரியை குழந்தைகளுக்குக் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன விளைவுகளைத் தரும் என்பது குறித்து காணலாம்
ப்ளூபெர்ரி ஊட்டச்சத்துக்கள்
ப்ளூபெர்ரியில் வைட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இதில் ஜீரோ சதவீதம் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு
ப்ளூபெர்ரி பழத்தில் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் மக்னீசியம் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் உடல் எலும்பை வலுப்படுத்த உதவுகிறது
சீரான இரத்த ஓட்டத்திற்கு
ப்ளூபெர்ரி பழம் பொட்டாசியம் நிறைந்துள்ளதாகும். இவை இரத்த நாளங்களின் தளர்வுக்கு உதவுவதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது
மூளை செயல்பாட்டிற்கு
நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு ப்ளூபெர்ரி உதவுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
ப்ளூபெர்ரி பழம் பாலிபினால்கள் நிறைந்த பழமாகும். இது இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தைத் தருவதுடன் சிறு குழந்தைகள் எதிர்கொள்ளும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கிறது
கண்களின் ஆரோக்கியத்திற்கு
ப்ளூபெர்ரி பழங்களில் உள்ள அந்தோசயனின்கள் இரட்டைப் பார்வை, கண்புறை வளர்ச்சி போன்ற பிரச்சனைகளைத் தடுத்து கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
ப்ளூபெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் சி குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது